Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயன்படுத்தி தூக்கி எறியும் வழக்கம் ஐபிஎல் தொடரில் உண்டு… கெய்ல் முடிவு குறித்து பீட்டர்சன் கருத்து!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (15:25 IST)
கிறிஸ் கெய்ல் தான் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டதாக நினைத்திருப்பார் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெய்ல் திடீரென அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பஞ்சாப் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு இந்த முறை வாய்ப்புகள் சரியாக வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கெய்ல் டி 20 உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஆனால் உண்மையான காரணம் அவர் அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்ந்திருப்பார் என்பதே கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘கெய்லை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு போட்டிக்கு எடுக்கிறார்கள். பின்னர் தூக்கி வீசுகிறார்கள். யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் ஐபிஎல் தொடரில் உண்டு. அவரது பிறந்தநாளில் கூட அவரை ஆடவிடவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments