Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பந்துகூட வீசப்படாமல் குஜராத் - கொல்கத்தா போட்டி ரத்து.. தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு..!

Siva
செவ்வாய், 14 மே 2024 (06:36 IST)
ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்தது.

கொல்கத்தா ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் குஜராத் ஏற்கனவே கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் நேற்றைய போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் தான் நடக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்ததை அடுத்து போட்டி தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததை அடுத்து ஒரு கட்டத்தில் போட்டி நடத்த முடியாது என்பதை முடிவு செய்த நடுவர்கள் போட்டி ரத்து என்று அறிவித்தனர்.

இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எடுத்துக் கொல்கத்தா அணி தற்போது 19 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதும் குஜராத் அணி 11 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கிடையான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆப் செல்ல ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments