Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? தலைவலியாக உள்ளது - விராட் கோஹ்லி

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (17:31 IST)
எல்லோரும் சிறப்பாக ஆடுவதால் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்பது தலைவலியாக உள்ளது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

 
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது:-
 
எங்களுக்கு தேவையான உத்வேகம் இந்த தொடரின் வெற்றி மூலம் கிடைத்துள்ளது. இரண்டு போட்டியிலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது ஆடும் லெவன் அணியில் யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற தலைவலி எனக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இளம்வீரர்கள் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த காலக்கட்டமாகும்.
 
இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தால், நம்மிடமும் பேட்டிங்கில் மிரட்ட வீரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து தொடர் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments