டி 20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐக்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டி 20 உலகக்கோப்பை இந்தியாவில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மற்றும் மூன்றாவது அலையின் அறிகுறிகள் ஆகியவற்றால் இந்தியாவில் நடத்துவது சாத்தியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் வீரர்களின் கொரோனா பாதிப்புக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதும் இந்த அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது சம்மந்தமாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடமாக உலகக்கோப்பை தொடரை நடத்த ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸ் தேர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.