Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான் தாஹீர் சுழலில் விழுந்தது ஜிம்பாப்வே –தெ.ஆ. சுலப வெற்றி

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (10:54 IST)
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டீ 20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிப்பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நேற்று முதலாவது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அந்த அணி முதல் இரண்டு ஓவர்களிலேயே தனது தொடக்க ஆட்டக்காரர்களான க்ளோட்டே(2), டீகாக்(5) இழந்து தடுமாறியது.  மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் டூ பிள்ஸ்சி(34) மற்றும் டூஸன்(56) சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதற்கடுத்து வந்த டேவிட் மில்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே சார்பில் அந்த அணியின் கைல் ஜார்விஸ் மூன்று விக்கெட்களும் க்றிஸ் ஃப்போஃபு இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதையடுத்து 161 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியின் பீட்டர் மோர்(44) மற்றும் பிராண்டன் மவுட்டா(28) மட்டும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக அந்த அணி 17.2 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments