Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் இன்னிங்ஸில் 145 ரன்களில் ஆல்-அவுட் ஆன இந்தியா

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (16:19 IST)
முதல் இன்னிங்ஸில் 145 ரன்களில் ஆல்-அவுட் ஆன இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
 
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது என்பதும் அந்த அணி அக்சர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர்களின் அபார பந்துவீச்சால் 112 ரன்களில் சுருண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கிய போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஓரளவு நிலைத்து ஆடினாலும் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதால் இந்திய அணியும் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்திய அணி தற்போது 33 ரன்கள் மட்டுமே அதிகமாக எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் ஜோ ரூட் 5 விக்கெட்டுக்களையும், லீச் 4 விக்கெட்டுக்களையும் ஆர்ச்சர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் மூன்று நாட்களுக்கும் அதிகமாக மீதமிருக்கும் நிலையில் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே மீதம் இருப்பதால் இந்த போட்டியின் முடிவு மூன்றாவது அல்லது நான்காவது நாளில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments