இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று வெலிங்டனில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் போடப்படும் நிலை ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் மட்டுமே அடித்ததால் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கேஎல் ராகுல் மற்றும் விராத் கோலி களமிறங்கிய நிலையில் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்த கேஎல் ராகுல் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்
இதனை அடுத்து விராட்கோலி 4-வது பந்தில் 2 ரன்களும், ஐந்தாவது பந்தில் 4 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி இன்னொரு சூப்பர் ஓவர் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வெற்றியை அடுத்து இந்தியா 4 -0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது