ஒரு நாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 47 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை தீப்தி சர்மா அபாரமாக விளையாடி 53 ரன்களும், கடைசி நேரத்தில் அமன்ஜோத் கவுர் 57 ரன்களும் எடுத்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினார்கள்.
இதனை அடுத்து, 270 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை மகளிர் அணி பேட்டிங் செய்த நிலையில், 45.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக, இலங்கை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.