Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் நாளில் இந்தியா ஆதிக்கம் – போராடும் ஆஸி டெய்ல் எண்டர்ஸ்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (15:32 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூன்றாம் நாளில் ஆஸி 135 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் ஆஸி அணி 135 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவை விட நான்கு ரன்களே முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்னும் நான்கு விக்கெட்களே கைவசம் உள்ளன. இதனால் இந்திய அணி வெற்றி பெறுவது எப்படியும் உறுதி என்ற நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments