Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் வங்கதேசம்.. இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:33 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் நிலையில் இருப்பதால், இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது.

அதன்பின், இந்தியா டி20 போட்டியைப் போல அதிரடியாக விளையாடி 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில், வங்கதேசம் தற்போது 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
இந்தியாவின் ஸ்கோரை விட 66 ரன்கள் மட்டுமே  வங்கதேசம் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்டால், குறைந்த இலக்கை இந்தியா இன்று கடைசி நாளுக்குள் எடுத்து விடும் எனவும், இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது."



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசன் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்துவிட்டார்… கோலியைப் புகழ்ந்த ரவி சாஸ்திரி

ஐபிஎல் பவுலர்களுக்கு நான்கு ஓவர்களுக்கு மேல் வீசத் தெரியாது… ஷமியைப் புகழ்ந்த பெங்கால் அணிக் கேப்டன்!

யுவ்ராஜ் தந்தையின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர்!

ஓய்வை அறிவித்த நியுசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்!

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments