ஒருவழியாக போட்டியை டிரா செய்த விஹாரி: 161 பந்துகளுக்கு 23 ரன்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த நிலையில் விஹாரியின் அபாரமான ஆட்டம் காரணமாக போட்டி டிரா ஆனது
இந்த போட்டியில் 407 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 131 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிரா என நடுவர்கள் அறிவித்தனர்
மிகச் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்த விஹாரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் அவர் 161 பந்துகளில் வெறும் 23 ரன்கள் மட்டும் எடுத்து நங்கூரமாக நின்றதே இன்றைய போட்டி டிரா ஆனதற்கு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது/ மேலும் இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக ஸ்டீவன் சுமித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்:
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 338/10
ஸ்மித்: 131
லாபுசாஞ்சே: 91
புகொவ்ஸ்கி: 62
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 244/10
ரிஷப் பண்ட்: 36
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 312/6 டிக்ளேர்
லாபுசாஞ்சே: 73
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 334/5
ரிஷப் பண்ட்: 97
புஜாரே:77
ரோஹித் சர்மா: 52
ஆட்டநாயகன்: ஸ்டீபன் ஸ்மித்
இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி பிரிஸ்பைன் மைதானத்தில் நடைபெறும்