Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
, புதன், 2 டிசம்பர் 2020 (13:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி சச்சினின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 303 என்ற இலக்கை இந்திய அணி கொடுத்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலியின் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து தவான் மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் தவான் 16 ரன்களிலும் கில் 33 ரன்களில் அவுட் ஆகிய நிலையில் கேப்டன் விராத் கோலி அருமையாக 63 ரன்கள் அடித்தார்.
 
இதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் சொதப்பிய நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அபாரமாக ஆடினார்கள். பாண்டியா 92 ரன்களும் ஜடேஜா 66 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர். இதனையடுத்து இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி சச்சினின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். கோலி 23 ரன்கள் எடுத்தபோது, விரைவாக 12 ஆயிரம் ரன்களை கடந்து, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்தார். 
 
சச்சின் டெண்டுல்கர் 309 ஒருநாள் போட்டிகளில் (300 இன்னிங்ஸ்) விளையாடி 12,000 ரன்களை கடந்திருந்தார். விராட் கோலி இந்த இலக்கை 251வது போட்டியில் (242 இன்னிங்ஸ்) எட்டினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்திக் அபாரம்: ஆஸ்திரேலியாவுக்கு 303 இலக்கு கொடுத்த இந்தியா!