Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் 3வது ஒருநாள் போட்டி நிறுத்தம்: கிறிஸ் கெய்ல் அதிரடி வீணாகுமா?

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (21:30 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் போட்டி மழை காரணமாக தடைபட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்றைய மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் நிலை இருக்கும். அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றால் தொடர் சமமாகும் என்ற நிலை உள்ளது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கிறிஸ்ட் கெய்ல் மற்றும் லீவீஸ் அதிரடியாக விளையாடினர். கெய்ல் 41 பந்துகளில் 72 ரன்கள் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். அதே போல் லீவிஸ் 29 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது 
 
மழை நின்றவுடன் ஆட்டம் தொடருமா? அல்லது இந்த போட்டி ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை இந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டாலும் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரையும் வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments