Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

முதல் டெஸ்ட்டில் இந்தியா 31 ரன்னில் வெற்றி – போராடித் தோற்ற ஆஸ்திரேலியா !

முதல் டெஸ்ட்டில் இந்தியா 31 ரன்னில் வெற்றி – போராடித் தோற்ற ஆஸ்திரேலியா !
, திங்கள், 10 டிசம்பர் 2018 (10:41 IST)
ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டில் இந்திய அணி  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா அஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா புஜாராவின் சதத்தால். 250 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் பெரிய அள்வில் ரன் சேர்க்க முடியாமல் தனறி வெளியேறினர். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹேசில்வுட் 3 விக்கெட்களும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
webdunia

அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தங்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணி சார்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் பூம்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷமி 2 விக்கெட்களும்  வீழ்த்தி அசத்தினர்.
webdunia

இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன் பின் இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடியது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 18 ரன்களோடும் லோகேஷ் ராகுல் 44 ரன்களோடும் நடையைக் கட்ட அடுத்து வந்த புஜாராவும் கோஹ்லியும் பொறுப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நிதானமாக விளையாடிய கோஹ்லி 34 ரன்கள் நாதன் லியன் பந்தில் 3 ஆம் நாள் ஆட்டமுடிவில் ஆட்டமிழந்தார்.அதையடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரஹானே வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைக்க உதவினார். சிறப்பாக விளையாடிய புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ரோஹித் 1 ரன்னிலும் பண்ட் 25 ரன்னிலும் வெலியேற, அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
webdunia

இதையடுத்து 323 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் வழக்கம்போல சொதப்ப ஷான் மார்ஷ் மட்டும் நிலைத்து நின்று தாக்குப்பிடித்தார். அவருக்கு டிம் பெய்ன்ஸ் ஓரளவு நிலைத்து நின்று ஒத்துழைத்தார். ஷான் மார்ஷ் 60 ரன்களில் பெய்ன் 41 ரன்னிலும் பூம்ரா பந்தில் அவுட் ஆகி வெளியேறின்ர். அதனால் வெற்றி நிச்சயம் என்ற உறுதியுடன் பந்துவீசிய பவுலர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் தலைவலியை உண்டாக்கினர். கம்மின்ஸ்(28), ஸ்டார்க்(26), லியன்(38) ஆகியோர் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று இந்தியாவின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கினர். விடாது போராடிய இந்திய பவுலர்கள் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைத் தேடித்தந்தனர். இந்தியா சார்பில் பூம்ரா, ஷமி , அஸ்வின் 3 தலா 3 விக்கெட்களும் விக்கெட்டும் இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 31 ரன்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் – ஐந்தாம் நாள் திக் திக் நிமிடங்கள்