Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டி 20 போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா – கலக்கிய நடராஜன்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த  இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியைச் சேர்ந்த கே எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர்.

இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் சஹால் ஆகியவர்கள் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றி வெற்றியை இந்தியா பக்கம் கொண்டு வந்தனர். இதையடுத்து 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்கள் எடுத்து நட்ராஜன் தனது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments