இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் மீண்டும் சூப்பர் ஓவர் மூலம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டி தொடரில் முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று விட்டது. இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டியில் வெல்லிங்டன் நகரில் இன்று நடைபெற்றது. இந்திய அணியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக புதிய வீரர்கள் இறக்கப்பட்டனர். நியூஸிலாந்து கேப்டன் செளதி டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தார் அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பியது. மனிஷ்பாண்டே மட்டும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி கௌரவமாக 165 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி இந்தியா போலவே விக்கெட்களை இழந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அந்த அணியின் காலின் முன்றோ மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் அரைசதம் அடித்ததால் அந்த அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவானது.
கடைசி ஓவரை வீசிய சைனி ராஸ் டெய்லர் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் மற்றும் மிட்செல் ஆகியோர் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் எடுத்ததால் பரபரப்பான சூழல் உருவானது. கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாக சாண்ட்னர் அடித்து விட்டு இரு ரன்கள் ஓட முயல இரண்டாவது ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி டை ஆக இன்றைய போட்டியிலும் சூப்பர் ஓவர் வீச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.