இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையில் மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்ச்சில் டாஸ் வென்ற இந்திய அணிக்கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் ஏதேனு ஒரு டெஸ்ட் மேட்ச்சில் விளையாடும் படி தனது அட்டவணையை எப்போதும் தயார் செய்துகொள்ளும். இந்த டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தும்ஸுக்கு அடுத்த நாள் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசுப்பொருட்கள் அடங்கிய பாக்ஸ்களை அனுப்பும் நாள் என்பதால் அன்று நடைபெறும் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது.
இந்தாண்டு பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா ஆஸ்திரேலியாவோடு மோதுகிறது. ஏற்கனவே நடந்து முடிந்துள்ள இரு டெஸ்ட்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சம்நிலை வகிக்கின்றன. மூன்றவது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பெர்த் டெஸ்ட்டில் அடைந்த தோல்வியின் காரணமாக கடுமையாக விமர்சிக்கப்ப்ட்ட கோஹ்லி அணியில் முன்று மாற்றங்களை செய்துள்ளார். மோசமான ஃபார்மில் இருக்கும் ராகுல், விஜய் ஆகிய இருவர்களையும் தூக்கிவிட்டு மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹரியைத் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கியுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். சுழறந்து வீச்சாளரான ஜடேஜாவுக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.
தொடங்கி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா உணவு இடைவேளை வரை 1 விக்கெட்டை இழந்து 57 ரன்களை சேர்த்துள்ளது. முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விஹாரி 8 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வா 34 ரன்களுடனும் புஜாரா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.