இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்களை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் மிகவும் கவனமாக விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்குள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மிக அபாரமாக விளையாடி 432 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதம் இருப்பதால் தோல்வியின் விளிம்பில் உள்ளது. வீரர்கள் அசாதாரணமான ஆட்டத்தை வெளிக்காட்டினால் மட்டுமே டிரா நோக்கி நகர்த்த முடியும் என்பதால் மிகவும் கவனமாக விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் ஓவருக்கு 1.5 ரன்கள் என்ற விகிதத்திலேயே மிகவும் நிதானமாக விளையாடி வருகின்றனர். தற்போது ராகுல் 32 பந்துகளில் 6 ரன்களும், ரோஹித் ஷர்மா 36 பந்துகளில் 12 ரன்களும் சேர்த்து களத்தில் நங்கூரம் பாய்ச்சி வருகின்றனர்.