இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் மீது பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவரை ஆதரிக்கவும் எதிர்க்கவும் பலர் உள்ளனர்.
அந்த வகையில், தோனிக்கு ஆதவாக கேப்டன் கோலி பேசினார். தற்போது காம்பீரும் பேசியுள்ளார். ஆனால், கங்குலியோ சற்று எதிர்மறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
கங்குலி இது குறித்து கூறியதாவது, இந்திய அணி நிர்வாகம் தோனியுடன் கலந்து பேசி, அவருக்குரிய பொறுப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் அவருக்குரிய இடம் குறித்தும் யோசிக்க வேண்டியது அவசியம். அணி நிர்வாகம் தோனிக்கு பதிலான மாற்று ஏற்பாட்டுக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகார்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் தோனியை விமர்சித்து இருந்தனர்.
ஆனால், காம்பீர் தோனிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தோனிக்கு எங்கு பெருமை சேர்க்க வேண்டுமோ அதை சேர்ப்பது தான் நியாயம். பலர் அவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நியாயமற்றது.
கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை பலர் செய்யவில்லை. கங்குலி, டிராவிட், ஷேவாக், தோனி ஆகியோரது தலைமையில் விளையாடி உள்ளேன். இதில் தோனியின் கேப்டன்ஷிப்பில் தான் நான் மகிழ்ச்சியாக ஆடியதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வீராட் கோலி, முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோரும் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.