உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
உலக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்ற 8 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இறுதி சுற்றில் துருக்கி வீரர் இஸ்மால் கெயிலுக்கும், அபிஷேக் வர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதி சுற்றில் 10.7 புள்ளிகள் திரட்டிய அபிஷேக் மொத்தமாக 244.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இஸ்மாயில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரரான சவுரப் சவுத்ரி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.
தற்போது நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இளவெனில் பெற்ற தங்கபதக்கம் உள்பட இந்தியா 2 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
அடுத்த வருடம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் சூழலில் இந்த தொடர் வெற்றிகள் ஒலிம்பிக்கில் இந்தியா புதிய சாதனையை படைக்க போட்டிருக்கும் அஸ்திவாரம் என்றே பார்க்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.