Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (09:22 IST)
இந்திய டெஸ்ட் அணி
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. ஹாமில்டனில் நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், வரும் எட்டாம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், 11ம் தேதி மூன்றாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது 
 
இதனை அடுத்து பிப்ரவரி 21ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார். இந்திய அணியில் மயாங்க் அகர்வால், பிரித்திவ் ஷா, கில்,  புஜாரா, விஹாரி, சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், சயினி, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, தவான் ஆகியோர் காயம் காரணமாக இல்லை என்றாலும் மயங்க் அகர்வால் பிரதியூஷா, மற்றும் கில் ஆகியோர் இணைந்து உள்ளது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments