Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வந்தது இவர்கள்தான் – இன்சமாம் புகழ்ந்த மூன்று வீரர்கள் !

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (07:19 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டு வந்த மூன்று பேட்ஸ்மேன்களை பட்டியலிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் தங்கள் தொழில்நுட்பத்தின் மூலமும் மனவலிமையின் மூலம் பேட்டிங்கில் மாற்றத்தைப் புகுத்திய 3 வீரர்கள் என்று மூவரை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் தெரிவித்துள்ளார். அவர் பட்டியலிட்டுள்ள வீரர்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், சனத் ஜெயசூர்யா மற்றும் ஏ பி டிவில்லியர்ஸ் ஆகியோரே ஆகும்.

அதற்கான காரணங்களாக அவர்  பட்டியலிடுபவை, ‘ரிச்சர்ட்ஸின் காலத்தில் பேக் புட் முறையில் தான் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வார்கள். ஆனால் அவர் முதல் முறையாக இறங்கி வந்து பிரண்ட் புட்டில் பந்துவீச்சாளர்களை சந்தித்து புதிய முறையை அறிமுகப்படுத்தினார்.’ என்றும் சந்த் ஜெயசூரியா குறித்து ‘சனத்தான் முதல் 15 ஒவர்களில் அதிரடியாக ஆடும் முறையை அறிமுகப்படுத்தினார். அவருக்கு முன்னால் தூக்கி அடிக்கும் பேட்ஸ்மேன்களை அவரை அமெச்சூர் என்பார்கள். அவர்தான் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தினார்’ எனக் கூறியுள்ளார்.

’மூன்றாவது வீரரான டிவில்லியர்ஸ்தான் தற்போது அதிரடியாக விளையாடும்  டி 20 பேட்ஸ்மேன்களுக்கு முன்னோடி.  பொதுவாக பேட்ஸ்மென்கள் நேராக தூக்கி அடித்து ஆடுவார்கள். ஆனால் டிவில்லியர்ஸ் ஸ்விப் மற்றும் ரிவர்ஸ் சுவிப் மூலம் பந்தை தூக்கி அடிப்பதை அறிமுகப்படுத்தினார்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments