Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

Siva
ஞாயிறு, 26 மே 2024 (21:18 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. 
 
இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சொதப்பியது என்பதும் இதனை அடுத்து 113 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆன நிலையில் மார்க்கம் 20 ரன்களும், பேட் கம்மின்ஸ் 24 ரன்களும்  எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் இன்று பந்துவீசிய அனைவருமே விக்கெட் எடுத்தார்கள் என்பதுதான் கூடுதல் சிறப்பு. ரஸல் 3 விக்கெட்டுக்கள், ராணா மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுக்கள், அரோகரா, சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 114 என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாட இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அந்த அணி சாம்பியன் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments