Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் ஒரு ஆயுதமாக திகழ்வார் – முன்னாள் வீரர் கணிப்பு!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:09 IST)
டெஸ்ட் போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் ஒரு ஆயுதமாக திகழ்வார் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. முன்னதாக டி20 போட்டிகள் மூலம் பிரபலமடைந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயண ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் புகழ் பெற்றுள்ளார். இதையடுத்து டெஸ்ட் போட்டியிலும் இடம்கிடைத்துக் கலக்கினார். அந்த தொடரிலும் கடைசிப் போட்டியில் களமிறங்கிய 3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆயுதமாக திகழ்வார் எனக் கூறியுள்ளார் முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான். அவர் ‘ டெஸ்ட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் எப்போதும் ஒரு ஆயுதம்தான். அவர்கள் வித்தியாசமான கோணத்தில் பந்துவீசி பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைப்பார்கள். ஆனால் நடராஜன் வேகம் மற்றும் ரிதம் ஆகியவற்றில் சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments