யூரோ கால்பந்து தொடர்: இத்தாலி சாம்பியன்
கடந்த சில வாரங்களாக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துக் கொண்டிருந்த யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடந்த நிலையில் இந்த போட்டியில் இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது
இறுதிப்போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆவேசமாக ஆடினார்கள். இதனையடுத்து ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு இருந்ததை அடுத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய பெனால்டி ஷாட் முறை அமல்படுத்தப்பட்டது
இதில் இத்தாலி 3 கோல்கள் போட்டது. ஆனால் இங்கிலாந்து இரண்டு கோல்கள் மட்டுமே போட்டதால் இத்தாலி அணி யூரோ கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
யூரோ கால்பந்து தொடரில் இத்தாலி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்றும் அரை நூற்றாண்டுக்கு பின்னர் அந்த அணி மீண்டும் யூரோ கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யூரோ கால்பந்து போட்டியை பெனால்டி முறையில் இழந்த இங்கிலாந்து அணி வீரர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது