Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் தப்பி பிழைத்தது பஞ்சாப் அணி! அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு

Webdunia
புதன், 10 மே 2017 (06:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. 10 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த பஞ்சாப் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் நேற்று அபாரமாக விளையாடி கொல்கத்தாவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல பஞ்சாப் அணிக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



 


நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியதால் பஞ்சாப் பேட்டிங்கில் களமிறங்கியது. மேக்ஸ்வெல் அடித்த 44 ரன்களால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் குவித்தது.

168 என்ற இலக்கை கொல்கத்தா எளிதில் அடைந்துவிடும் என்றே அனனவரும் எதிர்பார்த்த நிலையில் பஞ்சாப் அணியின் அனல்பறக்கும் பந்துவீச்சு காரணமாக கொல்கத்தா அணி,20 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் தற்போது 12 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பஞ்சாப் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments