Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான நடத்தை: கோலிக்கு 25% சம்பள தொகை அபராதம்...

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (20:48 IST)
கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டாம் போட்டி நடைபெற்ற செஞ்சூரியன் மைதானத்தில் அணி தேர்விலும் களத்திலும் சர்ச்சைக்குரிய தவறுகளை நிகழ்த்தினார் கேப்டன் கோலி. குறிப்பாக 2 வது இன்னிங்ஸ் ஆடும்போது பந்து ஈரமாக இருப்பதாக நடுவர் காஃபிடம் கோலி தொடர்ந்து புகார் அளித்து தொந்தரவு செய்து வந்தார். 
 
இதற்கு நடுவர்கள் என்ன பதிலளித்தார்கள் என தெளிவாக தெரியாத நிலையில், தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பந்தைத் தரையில் ஓங்கி அடித்தார் கோலி. இதனை ஐசிசி ஆவேசமான செய்தி என கருதி சம்பளத்தில் 25% தொகை அபராதமாக செலுத்த  உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் தகுதிழப்பு புள்ளியையும் கோலி பெற்றுள்ளார். 24 மாதங்களில் 4 அல்லது அதற்கு மேலான தகுதியிழப்பு புள்ளிகளை அவர் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் போட்டிகளுக்கு தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments