Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவை துணைக்கேப்டன் பதவியில் இருந்து நீக்கக்கோரிய கோலி!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:25 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியை உலகக்கோப்பைக்கு பின்னர் விட்டுக்கொடுக்க உள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீர்ர் என்ற சாதனை படைத்துள்ளார். அதேசமயம் அவரது தலைமையிலான இந்திய அணி அஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் வென்று சாதித்தது. இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 2 போட்டிகளில் வென்றது.

அடுத்து, அவரது தலைமையிலான ஆர்.சி.பி அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றிவாகை சூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்படி கேப்டன் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு அவர் சில நிபந்தனைகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருநாள் அணியில் துணைக்கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதில் கே எல் ராகுல், நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளாராம். கடந்த சில ஆண்டுகளாக ரோஹித் ஷர்மாவுக்கும் கோலிக்கும் இடையே சரியான வைப்ரேஷன் இல்லை என்பது கிசுகிசுக்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கோலி இப்படி சொல்லியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பது அவர்களின் நட்பு குறித்து மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments