Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிக்கு ஆஸ்திரேலியாவே தகுதியான அணி - விராட் கோஹ்லி கருத்து !

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (09:04 IST)
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் அபாரமாக வென்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் நான்குப் போடிகளிலும் இரு அணிகளும் தலா இருப் போட்டிகளில் வெற்றி  பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று நடந்த 5 ஆவது போட்டியில் ஆஸி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆஸி நிர்ணயித்த 273 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அனியில் ரோஹித் ஷர்மா, கேதார் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று தாக்குப் பிடித்தனர். மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்தியா அனைத்து விக்கெட்டிகளையும் இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்ற பின்னர் தொடரை இழந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் கோஹ்லி’ 273 என்பது வெற்றி பெறக் கூடிய ஸ்கோர்தான். நாங்கள் 15 முதல் 20 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்து விட்டோம். ஆனால் தொடர் முழுவதிலும் ஆஸி அணி எங்களை விட மிகச் சிறப்பாக விளையாடினர். அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்களே. நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடி வெற்றியைக் கைப்பற்றியுள்ளனர். கடைசி 3 போட்டிகளில் சில வீரர்களைக் களமிறக்கி பரிசோதனை செய்து பார்த்தோம். உலகக்கோப்பையில் பெரிய அளவில் சாதிகக் விரும்புகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments