Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் சதம் அடித்துவிட்டு பேசு… படிகல்லுக்கு கோலியின் அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:16 IST)
ஆர் சி பி அணியின் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 178 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அந்த அணியின் 20 வயது தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலமாக இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பே சதமடித்த மூன்றாவது இந்திய வீரராக சாதனைப் படைத்துள்ளார் படிக்கல்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய கோலி ‘ எல்லா நாளும் நானே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். எதிர்முணைஇல் இருக்கும் வீரர் சிறப்பாக விளையாடினால் என் வேலை ஸ்ட்ரைக்கை மாற்றுவதுதான். கடைசில் எனக்கான பந்துகள் கிடைத்த போது நல்ல ஷாட்களாக ஆடினேன். ஒரு கட்டத்தில் படிக்கல் நான் சதமடிப்பது முக்கியமில்லை. எப்போது வேண்டுமானாலும் சதம் அடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். போட்டியை முடியுங்கள எனக் கூறினார். அவரிடம் நான் ‘அதை முதல் சதத்தை அடித்துவிட்டுக் கூறு’ என நான் கூறினேன். அவரின் இன்னிங்ஸ் மிகச் சிறப்பான ஒன்று.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments