Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனே அணிக்கு ஷாக் கொடுத்த கொல்கத்தா:

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (05:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் புனே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர், முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த புனே அதிரடி ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ரஹானே 46 ரன்களும், \ஸ்மித் 51 ரன்களும் எடுத்தனர்.



 


183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா கேப்டன் காம்பீர் மற்றும் உத்தப்பா ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் 18.1 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த உத்தப்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். காம்பீர் 62 ரன்கள் எடுத்தார்

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தனது முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. தோல்வி அடைந்த போதிலும் தொடர்ந்து புனே 8 புள்ளிகள் எடுத்து 4வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நாள் முன்னதாகவே கான்பூர் சென்ற இந்திய அணி வீரர்கள்.. கம்பீரின் திட்டம் இதுதான்!

இனி ரிஷப் பண்ட்டின் கையில்தான் ஆட்டத்தின் அச்சாணி இருக்கும்.. முன்னாள் வீரர் பாராட்டு!

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

அடுத்த கட்டுரையில்
Show comments