Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினை ஓரங்கட்டுகிறாரா குல்தீப் யாதவ் ? – ரவி சாஸ்திரி பதில்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:18 IST)
இந்திய அணியின் முன்னணிப் பந்து வீச்சாளரான அஸ்வினை விட இளம்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்தான் தற்போதைய நிலையில் சிறந்த பந்து வீச்சாளர் என இந்தியாவின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

குல்தீப் மற்றும் சஹால் சுழற்பந்து ஜோடியால் ஏற்கனவே அஸ்வின் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ள குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி வருவதால் இப்போதைய சூழ்நிலைக்கு சிறந்த பவுலர் குல்தீப்தான் என இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மேலும் ‘ஒவ்வொரு பவுலருக்கும் ஒரு சிறப்பானக் காலம் உள்ளது. அதுப் போல இப்போது குல்தீப்பின் காலம். லிமிடெட் ஓவர் கிர்க்கெட் போட்டிகள் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த வெளிநாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் கடினமான சூழ்நிலைகளில் ஒரே ஒரு சுழல்பந்து வீச்சாளரைத்தான் தேர்வு செய்ய வேண்டுமென்றால் குல்தீப் யாதவ் தான் தேர்வு செய்யப்படுவார்.’ எனக் கூறியுள்ளார்.

இதனால் டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினின் இடம் இப்போது கேள்விக்குறியுள்ளாகியுள்ளது. ஏற்கனவே இந்தியக் கேப்டன் கோஹ்லி அஸ்வின் தனது உடலைக் காயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார் எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments