பங்க்ளாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 395 ரன்களை சேஸ் செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
ஒரு காலத்தில் ஜாம்பவான் அணியாகவும் முதல் இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற நாடாகவும் வெஸ்ட் இண்டீஸ் இருந்தது. ஆனால் பிரையரன் லாரா, சந்தர்பால் போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பிறகு நிதானமாக விளையாடக் கூடிய வீரர்கள் இல்லாத காரணத்தால் அந்த அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொய்வை சந்தித்துள்ளது. அந்த அணி வீரர்கள் அனைவரும் தங்களை டி 20 போட்டிக்காக மட்டுமே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
தற்போது பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்த அணி முதல் டெஸ்ட் போட்டியில் பரிதாபகராமாக தோற்றது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 395 ரன்களை துரத்தி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் 430 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸோ முதல் இன்னிங்ஸில் 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு பங்க்ளாதேஷ் டிக்ளேர் செய்ய, வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்தில் சொதப்பினாலும், பின்னர் நின்று நிதானமாக விளையாட ஆரம்பித்தது. அந்த அணியின் அறிமுக வீரரான கைல் மேயர்ஸ் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து தனது அணியை வெற்றி பெறவைத்தார்.