Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இனிமேல் மன்கட்டிங் பெயரை சொல்லி அஸ்வினைக் கலாய்க்க முடியாது… ஐசிசி கொண்டுவந்த புதிய விதி!

இனிமேல் மன்கட்டிங் பெயரை சொல்லி அஸ்வினைக் கலாய்க்க முடியாது… ஐசிசி கொண்டுவந்த புதிய விதி!
, புதன், 9 மார்ச் 2022 (16:59 IST)
ஐசிசி கிரிக்கெட்டில் இரண்டு புதிய விதிகளைக் கொண்டுவர உள்ளது. இதற்கான பரிந்துரையை MCC அறிவித்துள்ளது.

கிரிக்கெட் உலகின் சர்ச்சைகளில் ஒன்றாக மன்கட்டிங் விக்கெட் முறை இருந்து வருகிறது. 1948 ஆம் ஆண்டு இந்தியாவின் வினோ மன்கட் பந்துவீசும்போது எதிர்முணையில் நின்ற ஆஸி பேட்ஸ்மேன் பில்லி ப்ரௌன் கிரீஸை விட்டு செல்ல ஸ்டம்ப்பை தட்டி அவுட்டாக்கினார். அப்பொது இந்த முறையில் அவுட் ஆக்குவது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை கெடுப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.  அன்று முதல் இதுபோல விக்கெட் எடுப்பது மன்கட்டிங் என சொல்லப்படுகிறது.  ஆனால் அவ்வப்போது யாராவது இதுபோல மன்கட்டிங் செய்ய அது சர்ச்சையாகி வந்தன.

இந்நிலையில் சமீபத்தில் மன்கட்டிங் முறையில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. 12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் பஞ்சாப் அணி வீரர் அஸ்வின் எதிரணி வீரர் ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் அஷ்வின் தான் செய்தது தவறில்லை என ஆணித்தரமாகக் கூறிவந்தார்.

இந்நிலையில் இப்போது வரும் செப்டம்பர் முதல் மன்கட்டிங் முறையில் விக்கெட் எடுப்பது ரன் அவுட் வகையில் சேர்க்கப்பட உள்ளது. அதுபோலவே இனிமேல் பந்தை கிரிப் ஆக்க பந்தில் எச்சில் தடவுவது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்புக்காக இந்த முடிவை MCC பரிந்துரை செய்துள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே போட்டியில் ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட ஜடேஜா!