இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி 106 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி டிக்ளேர் செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் தொடக்க ஆட்டக்காரர் பின்ச் விக்கெட்டை இழந்தது. அவர் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் விராத் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து பின்ச் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று முதலே மெல்போர்ன் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்னும் 367 ரன்களை எடுக்குமா? அல்லது இந்திய அணி 9 விக்கெட்டுக்களை வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்