இளைஞர்களை காப்பாற்றிய பிரபல கிரிக்கெட் வீர
தனது வீட்டின் முன்னால் மயக்கம் போட்டு விழுந்த இளைஞர்களை காப்பாற்றிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது. மே 3 வரை பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்கப் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏப்ரல் 15 முதல் இயல்பு நிலை திரும்பி விடும் என்று காத்திருந்த மாநிலம் விட்டு மாநிலத்திற்கு வேலைக்கு வந்த இளைஞர்கள் பலர் மே 3ஆம் தேதி வரை தாக்கு பிடிக்க முடியாது என்பதால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்ல ஆரம்பித்தனர்
இதனை அடுத்து பீகாரில் இருந்து ராஜஸ்தானுக்கு சுமார் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் சில இளைஞர்கள் நடந்து சென்றபோது திடீரென அவர்களில் ஒரு சிலர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. சரியாக அவர்கள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் வீட்டின் முன் மயங்கி விழுந்தனர். இதனை சிசிடிவி கேமரா வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது ஷமி உடனடியாக வீட்டிற்கு வெளியே வந்து மயங்கி இருந்த இளைஞர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த இளைஞர்கள் அனைவருக்கும் உணவு கொடுத்து உதவி செய்துள்ளார்
பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் அந்த இளைஞர்கள் முகமது ஷமிக்கு நன்றி தெரிவித்து தங்கள் ஊரை நோக்கி சென்றனர். இந்த தகவலை முகமது ஷமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது