துபாயில் கொரோனாவுக்காக தனிமைப்படுத்திக் கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கு தனிமைப் படுத்திக் கொள்வது பற்றி ஏற்கனவே அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது மற்றொரு இந்திய வீரரான முகமது ஷமியின் இது குறித்து பேசியுள்ளார். அதில் ‘4 மாத ஊரடங்கு அனைவருக்கும் மிக கடுமையாக இருந்திருக்கும். நான் எனது வீட்டிலேயே பயிற்சி மற்றும் வேலைகளை செய்தேன். ஆனால் இப்போது துபாயில் இந்த 6 நாட்கள் 4 மாதங்களை விட கடினமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.