தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 237 ரன்களை பெற்று முதல் பாதியை முடிவு செய்துள்ள நிலையில் 238 ரன்களை இலக்காக கொண்டு பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.
ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இலண்டனில் கோலகலமாக நடந்து வருகின்றன. இன்று நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேன்களான குப்டில், காலின் மன்றோ முதல் 6 ஓவர்களிலேயே ஆட்டமிழந்துவிட நியூஸிலாந்து திக்குமுக்காடி போனது. தொடர்ந்து விளையாடிய ராஸ் டெய்லர், டாம் லாத்தம் ஆகியோர் 12 ஓவர்களுக்குள் ஆடமிழந்தனர். 12 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூஸிலாந்தை வில்லியம்சன், ஜேம்ஸ் நீசம், கோலின் கிரந்தோமே ஆகியோர் தங்களது அபார ஆட்டத்தால் தூக்கி நிறுத்தினர்.
50 ஓவர் முடிவில் 237 ரன்களை பெற்றது நியூஸிலாந்து. பாகிஸ்தான் 238 ரன்களை இலக்காக கொண்டு அடுத்து களம் இறங்க இருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு மிக பெரிய இலக்கு இல்லை என்றாலும் நியூஸிலாந்தின் அபார பந்துவீச்சை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.