Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அபார பந்துவீச்சு: 4 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (08:07 IST)
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இன்று நேப்பியர் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ்  வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து முதல் ஓவரை பந்துவீசிய ஷமி முதல் ஓவரிலேயே குப்தில் விக்கெட்டை வீழ்த்தினார். ஐந்து ரன்களே எடுத்த குப்தில் ஆட்டமிழந்த நிலையில் 4வது ஓவரில் மீண்டும் ஷமி முன்ரோ விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணி 7 ஓவரக்ளில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது. கேப்டன் வில்லியம்சன் 6 ரன்களும், டெய்லர் ஒரு ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர். மூன்று ஓவர்களில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய ஷமி 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments