இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 41 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது
ஆரம்பத்தில் அதிரடியாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி விளையாடினாலும் விக்கெட்டுகள் விழ விழ இந்தியாவின் அதிரடி குறைய ஆரம்பித்தது
குறிப்பாக இந்திய அணிக்கு 11வது ஓவரில் பவுண்டரி கிடைத்த நிலையில் அதன் பின் 40வது ஓவரில் தான் அடுத்த பவுண்டரி கிடைத்தது. இடையில் 29 ஓவர்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பவுண்டரி அடிக்கவில்லை என்பது பெரும் சோதனை. அதேபோல் இந்த 29 ஓவர்களில் சிக்ஸர்களும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலாக இந்திய அணி 29 ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸரும் அடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய அணி 41 ஓவர்களில் 200 என்ற மரியாதையான ஸ்கோரில் உள்ளது. 260 முதல் 275 வரை இந்திய அணி எடுத்தால் ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தி கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பப்படுகிறது.