Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் கொடியேந்தி செல்லும் மேரி கோம், மன்ப்ரீத் சிங்! – இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (09:34 IST)
ஜப்பானில் நடைபெறும் பிரபலமான ஒலிம்பிக் போட்டியில் துவக்க மற்றும் இறுதி நாட்களில் இந்திய கொடியேந்தி செல்ல உள்ள வீரர்கள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் நூறுக்கும் அதிகமான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது நடைபெறும் அணிவகுப்பில் இந்திய கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஏந்தி செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்டு 8ம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசிய கொடியை ஏந்தி செல்வார் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments