நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய போட்டி கராச்சி நகரில் நடந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது
இந்தநிலையில் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 11 ரன்கள் மீதமிருக்கும் நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். நேற்றைய போட்டியில் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் நீஷம் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்