நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நெருங்கிய பாகிஸ்தான்!
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது
கடந்த 26ஆம் தேதி ஆரம்பித்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்றைய கடைசி நாளில் பாகிஸ்தான் அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 431 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் 2-வது இன்னிங்சில் தற்போது 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. பேவட் அலம் 94 ரன்களும் முஹம்மது ரிஸ்வான் 45 ரன்களும் எடுத்து விளையாஇ வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 158 ரன்கள் மட்டுமே தேவை என்பதும் கையில் 6 விக்கெட்டுகள் உள்ளது என்பதும் தற்போது விளையாடி வரும் பேவட் அலம் நல்ல பார்மில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. இன்று ஒரே நாளில் வெற்றிக்கு தேவையான 158 ரன்களை பாகிஸ்தான் எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்