Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகுவோம்: பாகிஸ்தான் அணி மிரட்டல்..!

Advertiesment
பாகிஸ்தான்

Siva

, செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (14:16 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மாற்றப்படாவிட்டால், தொடரிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது. 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 14 அன்று நடந்த நிலையில் போட்டியில், டாஸ் போடும்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் கை குலுக்க மறுத்தார். போட்டியின் முடிவில், இந்திய அணி வெற்றி பெற்றபோதும், சூர்யகுமார் மற்றும் சிவம் துபே ஆகியோர் சல்மான் அகாவுடன் கை குலுக்காமல் மைதானத்திலிருந்து நேரடியாக வெளியேறினர். 
 
இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்கள் மற்றும் நடுவருக்கு எதிராக முறையான புகாரை பதிவு செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஷின் நக்வி, "விளையாட்டில் அரசியல் தலையிடுவது ஏமாற்றமளிக்கிறது" என்று தனது அதிருப்தியைத் தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் நடுவர் பைகிராஃப்டுக்கு ஆதரவாக ஐ.சி.சி. முடிவெடுத்ததால், தொடரில் தொடர்ந்து விளையாடுவதா அல்லது வெளியேறுவதா என்ற முடிவை பாகிஸ்தானிடமே விட்டுவிட்டது.
 
பாகிஸ்தானின் அடுத்த சுற்று தகுதி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால், அந்த அணி விலக வேண்டிய அவசியம் இருக்காது, தானாகவே வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஆளாக சூப்பர் நான்கு சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!