சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இன்றோடு முடிகின்றன. இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அதில் டாஸில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி டூ பிளஸ்சி மற்றும் ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. ரெய்னா 53 ரன்களும் டூ ப்ளஸ்சி 96 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.
இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணியில் ராகுல் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். அவர் 19 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். சிறப்பாக விளையாடிய ராகுல் 71 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே கெய்ல் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
அதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் 36 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சாம் கரன் மற்றும் மந்தீப் சிங் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 173 ரன்களை சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியை தோல்வியோடு முடித்துள்ளது. இப்போது முதல் இடத்தில் உள்ள சென்னை அடுத்து நடக்க இருக்கும் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றால் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படும்.