கொரியாவில் நடைபெற்ற ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து முத்ல் சுற்றிலேயே தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக பேட்மிண்டன் போட்டிகளில் வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்தவர் பி.வி.சிந்து. பலமுறை உலக ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் வெள்ளி, வெண்கல பதக்கங்களையே வென்றிருந்தார். தொடர்ந்து போராடிய சிந்து நடப்பு ஆண்டு உலக ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
ஆனால் சமீபகாலமாக சில போட்டிகளில் சுமாரான ஆட்டத்தையே தந்து வருகிறார் சிந்து. சமீபத்தில் நடைபெற்ற சீன ஓபன் பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் ஆட்டத்தில் பி.வி.சிந்து அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். முன்னாள் சாம்பியனான சாய்னா நேவாலும் இந்த போட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்நிலையில் தற்போது கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அமெரிக்க வீராங்கனை ஹாங் பெய்வானிடம் தோல்வியடைந்துள்ளார். பி.வி.சிந்து தோல்வியை சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டம் ஆகும். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.