Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி மற்றும் ஜெய் ஷா இங்கிலாந்து பயணம்… எதற்கு தெரியுமா?

Webdunia
புதன், 12 மே 2021 (08:45 IST)
பிசிசிஐ யின் தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

 ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘எஞ்சிய போட்டிகளை இந்தியாவில் நடத்துவது சிரமம். பயோ பபுளுக்குள் இருக்கையில் கொரோனா பரவல் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம்’ எனக் கூறினார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்தில் இந்தியா மற்றும் நியுசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி ஆட்டம் நடக்க உள்ள நிலையில் அங்கு செல்லும் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments