Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட் தலையை தாக்கிய பந்து! – ஆட்டத்திலிருந்து விலகினார்!

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (10:53 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் போட்டியில் காயமடைந்த ரிஷப் பண்ட் இரண்டாவது ஆட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாட இந்தியா வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆறாவதாக களம் இறங்கிய ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் அடித்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஃபீல்டிங்கில் ரிஷப் இடம்பெறவில்லை.

அவருக்கு பந்து தலையில் தாக்கியதால் மூளையில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க இருப்பதால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments