இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கட்டாக் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
மேற்கிந்திய தீவுகள் அணியின் பூரன் மற்றும் பொல்லார்டு ஆகியோர்அதிரடியாக விளையாடி 89 மற்றும் 74 ரன்கள் எடுத்தனர். ஹோப் 42 ரன்களும், சேஸ் 38 ரன்களும், ஹெட்மயர் 37 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் அபார அரை சதத்தால் 17 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகின்றனர். இன்னும் 33 ஓவர்களில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் கைவசம் 10 விக்கெட்டுகள் இருப்பதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து கூறி வருகின்றனர். தற்போதைய நிலையில் இந்திய அணி ரன் ரேட் 6 சதவீதமாக இருக்கின்றது என்பதும், தேவைப்படும் ரன்ரேட் 6.48 சதவீதமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது