இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா பவர் பிளே ஓவர்களான 1 முதல் 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் மொத்தம் 597 ரன்கள் அடித்துள்ளார். அதில் பவர் பிளேவில் மட்டுமே அவர் 401 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் மொத்தம் 297 பந்துகளை சந்தித்துள்ளார் என்பதும் 135க்கும் மேல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பை தொடரில் 24 சிக்சர்களை அடித்துள்ள ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 87 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்பு ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்தவர் கிறிஸ் கெய்ல் என்பதும் அவர் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்ஸர்கள் அடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது அந்த சாதனையை தற்போது ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.